இதையடுத்து, வேலை நிறுத்தம் திட்டமிட்டபடி நடைபெறும் என்று போக்குவரத்து தொழிலாளர்கள் அறிவிப்பு செய்துள்ளனர். எந்தவித மிரட்டலுக்கு அஞ்சப் போவதில்லை என்றும் வேலைநிறுத்தம் நிச்சயமாக நடைபெறும் என்றும் போக்குவரத்து தொழிலாளர் சங்க தலைவர் நடராஜன் திட்டவட்டமாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தற்போது, போக்குவரத்து ஊழியர்களுக்கு இடைக்கால நிவாரணமாக ரூ. 1000 வழங்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் துறை எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.