சைதை துரைசாமி மகனை தேடுதல் பணியில் இந்திய கடற்படை..15 கி.மீ. சுற்றளவில் தேடுதல் வேட்டை..!

Mahendran

செவ்வாய், 6 பிப்ரவரி 2024 (14:14 IST)
சைதை துரைசாமி மகனை தேடுதல் பணியில் இந்திய கடற்படை ஈடுபட்டு இருப்பதாகவும்,15 கி.மீ. சுற்றளவில் தேடுதல் வேட்டை நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது
 
இமாச்சல பிரதேசத்தில் சுற்றுலாவுக்கு சென்று மாயமான சைதை துரைசாமி மகன் வெற்றி துரைசாமியை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. சட்லஜ் நதிக்கரையில் மாயமான வெற்றி துரைசாமியை கண்டுபிடிக்க கடற்படை உதவியை கின்னூர் மாவட்ட நிர்வாகம் நாடியுள்ளது.
 
மேலும் சென்னை அடையார் கடற்படை தளத்திலிருந்து, சிறப்பு பயிற்சி பெற்ற கடற்படை வீரர்கள் இமாச்சல் விரைந்துள்ளதாக கின்னூர் மாவட்ட ஆட்சியர் அமித் சர்மா கூறியுள்ளார்.
 
மேலும் விபத்து நடந்த இடத்திலிருந்து சுமார் 15 கி.மீ. சுற்றளவில் வெற்றி துரைசாமியை தேடும் பணி 2 நாட்களாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்