சசிகலா, தினகரன் குடும்பத்தை குறி வைத்து வருமான வரித்துறை சோதனை தொடர்ந்து இன்றும் நடந்து வருகிறது. தமிழகம் முழுவதும் சசிகலாவின் உறவினர்கள், நண்பர்கள், ஆதரவாளர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது. வியாழக்கிழமை காலையில் தொடங்கிய சோதனை இன்று நான்காவது நாளாக தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்த சோதனை தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மூன்று நாட்கள் சோதனையின் போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்கள் குறித்த அறிக்கையை டெல்லியில் உள்ள வருமான வரித்துறை தலைமை அலுவலகத்துக்கு அதிகாரிகள் அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் 150-க்கும் மேற்பட்ட வங்கிகணக்குகள் முடக்கப்பட்டு 1000 கோடி ரூபாய் மதிப்புடைய சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறாது. மேலும் இன்று நடைபெறும் சோதனையிலும் ஆவணங்கள் கைப்பற்றப்படலாம் என கூறப்படுகிறது.