இந்த பஞ்சாமிர்த தயாரிப்புகளில் பிரசித்தி பெற்ற நிறுவனங்களில் கந்தவிலாஸ் மற்றும் சித்த நாதன் ஆகிய இரு நிறுவனங்கள் புகழ்பெற்றவை. இவ்விரு நிறுவனங்களும் பஞ்சாமிர்தம் உற்பத்தி மற்றும் விற்பனைகளில் கோலோச்சி வருகின்றன. இந்நிலையில் இன்று காலை அதிரடியாக இவ்விரு நிறுவனங்கள் மற்றும் கடைகளில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இங்கு வரி ஏய்ப்பு நடந்துள்ளதாக வந்த புகாரின் பேரில் இந்த சோதனை நடந்ததாக கூறப்படுகிறது.