TN Budget 2022: 11 மணி வரை பட்ஜெட்டில் வெளியான அறிவிப்புகள் என்னென்ன??

Webdunia
வெள்ளி, 18 மார்ச் 2022 (11:07 IST)
தமிழ்நாடு 2022-23 ஆம் ஆண்டுக்கான முழுமையான பட்ஜெட் இன்று தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.

 
நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் உரையை வாசித்து வருகிறார். இந்நிலையில் 11 மணி வரை பட்ஜெட்டில் வெளியான அறிவிப்புகள் என்னென்ன என்பதன் தொகுப்பு இதோ... 
 
# முதல்வரின் முகவரி என்ற புதிய துறையின் மூலம் 10.01 லட்சம் மனுக்களுக்கு உரிய தீர்வு காணப்பட்டுள்ளது.
# அகரமுதலி திட்டம் மூலம் தமிழ் மொழியின் வேர்ச் சொற்களை கண்டறியும் பணிகள் நடைபெறும்.
# வெள்ளத் தடுப்பு பணிகளுக்கு முதல்கட்டமாக 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
# விழுப்புரம், ராமநாதபுரத்தில் தொல்பொருட்களை வைக்க அருங்காட்சியகம் அமைக்கப்படும். இதற்காக 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு. 
# பெரியாரின் சிந்தனைகளை 21 மொழிகளில் பதிப்பிட 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு. 
# முதியோர் ஓய்வூதியம், மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம் உள்ளிட்ட சமூக பாதுகாப்பு ஓய்வூதிய திட்டங்களுக்கு ரூ.4,816 கோடி நிதி ஒதுக்கீடு. 
# கொற்கையில் ஆழ்கடல் ஆய்வு செய்ய 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு. 
# இந்த ஆண்டு 7 இடங்களில் அகழாய்வு பணிகள். அகழாய்வு, முன்கள ஆய்வுப் பணிகளுக்கு ரூ.5 கோடி ஒதுக்கீடு. 
# காவல்துறைக்கு ரூ.10,282 கோடி ஒதுக்கீடு. 
# சட்டம் ஒழுங்கு பராமரிப்பு பணிகளுக்கான காவல்துறைக்கு ரூ.10,282 கோடி ஒதுக்கீடு. 
# சுய உதவிக் குழுக்களுக்கு கடன், விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்க ரூ.4,130 கோடி ஒதுக்கீடு.
# அணைகள் புணரமைப்புக்கு ரூ.1,064 கோடி ஒதுக்கீடு.
# தமிழ்நாட்டில் உள்ள 64 பெரிய அணைகளை புணரமைக்க ரூ.1,064 கோடி ஒதுக்கீடு. 
# நீர்நிலை பாதுகாப்பு, அரசு நிலங்களை மீட்க 50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.
# ஒன்று முதல் 10ஆம் வகுப்பு வரை இலவச பாடப் புத்தகங்கள் வழங்க 15 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.
# ஆண்டுதோறும் 4 இலக்கிய திருவிழாக்கள் நடத்தப்படும். இதற்காக 5.6 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.
# நகைக்கடன் தள்ளுபடிக்காக ரூ.1000 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கீடு. 
# தமிழக பள்ளிக் கல்வித்துறைக்கு 36,895.89 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்