இதனையடுத்து காவல் நிலையத்தில் புகார் அளித்து, அவர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்நிலையில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட காவலர்களுக்கு மகாராஷ்டிரா காவல் நிலையத்தில் இருந்து தொலைப்பேசி அழைப்பு வந்தது.
அதில் அம்பிகா, லட்டூர் பகுதியில் உள்ள கருவேலந்தோப்பில் எரிக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்த தகவலை தெரிவித்தனர். இந்த கொலை குறித்த விசாரணையில் அம்பிகாவின் வீட்டருகே வசித்த கலியபெருமாள் தான் அம்பிகாவை எரித்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அம்பிகாவுக்கும், கலியபெருமாளுக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கலியபெருமாளுக்கு திருமணம் செய்து வைக்க அவரது வீட்டில் பெண் பார்க்கும் ஏற்பாடுகள் நடந்து வந்தன. இதனை அறிந்த அம்பிகா, நீ என்னுடன் தான் வாழ வேண்டும் என கூறி வற்புறுத்தியுள்ளார்.