ஐஐடி என்றால் ஐயர், ஐயங்கார் தொழிநுட்ப கல்லூரி என்று அர்த்தம்: கி. வீரமணி

புதன், 28 பிப்ரவரி 2018 (22:20 IST)
சமீபத்தில் சென்னை ஐஐடியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு பதிலாக சமஸ்கிருத பாடல் பாடப்பட்டது பெரும் சர்ச்சையாகி வரும் நிலையில் இன்று தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில்  நடைபெற்ற பெரியார் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட பேசிய திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி ஐஐடி என்றால் ஐயர்,ஐயங்கார் தொழிநுட்ப கல்லூரி என்றாகிவிட்டதால் வரும் விளைவுதான் இது என்று கூறினார்.

மேலும் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அரசியல்வாதிகள் நடிக்க ஆரம்பித்து விட்டதால், நடிகர்கள் அரசியல்வாதிகளாக மாறிவிட்டதாகவும், சில திரைப்பட நடிகர்கள் தமிழகத்தை குத்தகைக்கு எடுக்க பார்க்க முயற்சிப்பதாகவும், ,அதிலும் வந்த உடனே நேரடியாக முதலமைச்சர் ஆக வேண்டும் என்று எண்ணுவதாகவும் கி.வீரமணி தெரிவித்தார்

மேலும் டெல்லி ஆட்டுகிறது நாங்கள் ஆடுகிறோம்; பா.ஜ.கவின் சொல்கேட்டு செயல்பட்டு வரும்  அடிமையாக அ.தி.மு.க செயல்பட்டு வருகிறது என்பதை சமீபத்திய துணைமுதல்வரின் கருத்து உறுதி செய்துள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்