சனாதனத்திற்கு எதிராக பேசினால் நாக்கை பிடுங்குவோம்: மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்

செவ்வாய், 12 செப்டம்பர் 2023 (12:41 IST)
சனாதனத்தை எதிர்த்தால் நாக்கை பிடுங்குவோம் மற்றும் கண்ணை நோண்டுவோம் என மதிய அமைச்சர் ஒருவரே கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கடந்த சில நாட்களாக சனாதனம் எதிர்ப்பு மற்றும் சனாதனம் ஆதரவு குறித்த கருத்துக்கள் பதிவாகி வருகின்றன. உதயநிதி உள்பட ஒரு சிலர் சனாதன எதிர்ப்பையும் பாஜகவினர் மற்றும் இந்து அமைப்புகள் சனாதன ஆதரவையும் தெரிவித்து பேசி வருகின்றனர். 
 
ஏற்கனவே உதயநிதி தலையை சீவி வந்தால் 10 கோடி ரூபாய் கொடுப்பதாக உத்திர பிரதேச மாநில சாமியார் ஒருவர் கூறிய நிலையில் தற்போது மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் என்பவர் சனாதனத்தை எதிர்த்தால் நாக்கை பிடுங்குவோம் மற்றும் கண்ணை நோண்டுவோம் என்று கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
ஒரு மத்திய அமைச்சரே இவ்வாறு தெரிவிக்கலாமா என  கண்டனங்கள் பகிரப்பட்டு வருகின்றன.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்