துரைமுருகன் நடிப்பு எனக்கு பிடிக்காது - கமல்ஹாசன்

சனி, 20 அக்டோபர் 2018 (14:45 IST)
துரைமுருகனின் நடிப்பு எனக்கு பிடிக்காது என மக்கள் நீதி மைய்ய தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 
இன்று, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன் நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றது என கூறினார். மேலும் மக்கள் நீதி மைய்ய  கட்சி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்த திட்டங்களை கலந்தோசித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். 
 
தமிழக மக்களுக்கு என்னை பற்றி தெரியும் அதனால் நாங்கள் என்ன செய்யவேண்டும் என்று மக்களிடம் கலந்தோசித்து அவர்களின் நிறை, குறைகளை கேட்டறிகிறோம் என்று கமல் தெரிவித்தார்.
 
காங்கிரஸுடனான கூட்டணி குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், அதை குறித்து இப்போது எதுவும் சொல்லமுடியாது என்று கமல்ஹாசன் கூறினார்
 
சில தினங்களுக்கு முன்பு கமல்ஹாசனின் நடிப்பு எனக்கு பிடிக்கும் ஆனால் அவருக்கு அரசியல் பற்றின அனுபவம் போதாது என திமுகவின் பொருளாளர் துரைமுருகன் கமல்ஹாசனை பற்றி குறை  கூறியிருந்தார்.  தற்போது அதற்கு பதிலளித்த கமல், துரைமுருகனின் நடிப்பு எனக்கு பிடிக்காது என்று தெரிவித்தார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்