நான் குடிப்பதில்லை; மருத்துவ பரிசோதனைக்கு தயார்: விஜயகாந்த் சவால்

புதன், 11 மே 2016 (16:55 IST)
சமீபத்தில் என்.டி.டிவி-க்கு பேட்டியளித்த தேமுதிக-மக்கள் நல கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் விஜயகாந்த் தான் குடிப்பதில்லை எனவும், மருத்துவ பரிசோதனைக்கு தயார் எனவும் கூறியுள்ளார்.


 
 
ஐ எம் ஹீரோ, கருணாநிதி வில்லன், ஜெயலலிதா வில்லி என என்.டி.டிவி-க்கு விஜயகாந்த் ஆங்கிலத்தில் அளித்த பேட்டி இணையத்தில் கலக்கி வருகிறது. இந்த பேட்டியில் அவர் தான் இப்போது குடிப்பதில்லை என கூறியுள்ளார்.
 
ஆங்கிலம், தமிழ் என கலந்துகட்டி பதில் அளித்த விஜகாந்திடம் நீங்கள் அதிகமாக குடிப்பதாக ஒரு குற்றச்சாட்டு உள்ளதே என கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த விஜயகாந்த், அது பழைய குற்றச்சாட்டு. நான் தற்போது குடிப்பதில்லை.
 
என்னை விமர்சிப்பவர்கள் என்னை மருத்துவ பரிசோதனை செய்து பார்க்கலாம். மக்கள் முன்னிலையில் பொதுக்கூட்டங்களில் நான் இதை கூறிவிட்டேன் என கூறினார்.


வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்