சுந்தரம் காயத்ரி வீட்டாரிடம் இருசக்கர வாகனம் வாங்கித் தரக் கோரியும், புதிதாக வீடு கட்ட பணம் வாங்கி வரும்படியும் காயத்ரியிடம் கேட்டுள்ளார். இதனால் சுந்தரத்திற்கும் காயத்திரிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று இரவு சுந்தரத்துக்கும் - காயத்திரிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த சுந்தரம் காயத்ரியை தாக்கியுள்ளார். படுகாயமடைந்த காயத்ரி தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.