ஜூலை 31க்குள் +2 ரிசல்ட்.. மதிப்பெண் வழங்குவது எப்படி? – காத்திருப்பில் மாணவர்கள்

Webdunia
வெள்ளி, 25 ஜூன் 2021 (12:21 IST)
மாநில பாடத்திட்டத்தில் +2 மாணவர்களுக்கு மதிப்பெண்களை ஜூலை 31க்குள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் ரிசல்ட் குறித்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை பாதிப்புகள் காரணமாக பள்ளி, கல்லூரிகள் பல செயல்படாமல் இருந்து வருகின்றன. இந்நிலையில் கொரோனா காரணமாக சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் பயிலும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வின்றி தேர்ச்சி அளிப்பதாக அறிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து மாநில பாடத்திட்டங்களில் உள்ள மாநிலங்கள் சிலவும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வின் தேர்ச்சி அறிவித்தன.

ஆனால் மாணவர்களுக்கு மதிப்பெண் அளிக்கும் முறை குறித்து அவை விளக்கம் அளிக்காமல் உள்ளன. இந்நிலையில் தமிழகம் உள்ளிட்ட மாநில பாடத்திட்டத்தை கொண்ட மாநிலங்களுக்கு புதிய உத்தரவை உச்சநீதிமன்றம் விதித்துள்ளது. அதன்படி மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறை குறித்து ஜூன் 31க்குள் தெரிவிப்பதுடன், ஜூலை 31க்குள் ரிசல்ட்டை அறிவிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

அடுத்த மாதத்திற்குள் ரிசல்ட் வெளியாக உள்ள நிலையில் மதிப்பெண் ஒதுக்கீடு முறை எவ்வாறு செயல்படுத்தப்படும்? எப்போது ரிசல்ட் வெளியாகும் என மாணவர்கள், பெற்றோர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்