இன்றிரவு வெளுத்து கட்டப்போகும் மழை: 18 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

Siva
புதன், 11 டிசம்பர் 2024 (16:24 IST)
வங்கக் கடலில் தோன்றியுள்ள காற்றழுத்த தாழ்வு காரணமாக, தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும் என்றும் சில மாவட்டங்களில் கன மழை மற்றும் அதிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்த நிலையில், இன்று இரவு தமிழகத்தில் உள்ள 18 மாவட்டங்களில் கன மழை மற்றும் மிதமான மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, மேற்கண்ட மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் இன்று இரவு வெளியே செல்வதென்றால், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.


Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்