திருநெல்வேலி உள்பட நான்கு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது என்பதும் இதனால் ஏராளமான பொதுமக்கள் அவதியில் உள்ளனர் என்பதையும் பார்த்து வருகிறோம்.
இந்த நிலையில் வளிமண்டல சுழற்சியை நகர்ந்துவிட்டதை அடுத்து நெல்லை உள்பட தென் மாவட்டங்களுக்கு மழை குறைந்து உள்ளது. இதனை அடுத்து படிப்படியாக இயல்பு நிலை திரும்பி வருவதாகவும் குறிப்பாக திருநெல்வேலியில் தண்ணீர் குறைந்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளன
இந்த நிலையில் இயல்பு நிலை படிப்படியாக திரும்பி வந்தபோதிலும் பொதுமக்கள் அத்தியாவசிய தேவை இன்றி வெளியே வர வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் முக்கிய பணி இருந்தால் மட்டுமே வெளியே வரவும் என்றும் பாதுகாப்பாக வீட்டில் இருக்கவும் என்றும் நெல்லை மாவட்டம் நிர்வாகம் தெரிவித்துள்ளது.