குமரிக்கடல் பகுதிகளை நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்: வானிலை ஆய்வு மையம்

வியாழன், 22 டிசம்பர் 2022 (21:41 IST)
கடந்த சில நாட்களுக்கு முன்னர் வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை தோன்றிய நிலையில் அந்த காற்றழுத்த தாழ்வு தற்போது காற்றழுத்த மண்டலமாக மாறி குமரிக்கடல் நோக்கி நகர்ந்து வருவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 
 
வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது வேகம் குறைந்துள்ளதாகவும் அது வடமேற்கு திசையை நோக்கி நடந்து வருவதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
இந்த நிலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு மற்றும் தென்மேற்கு திசை வழியாக இலங்கை வழியாக குமரி கடல் பகுதியை நோக்கி நகரக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
இதன் காரணமாக குமரி நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் அந்த பகுதி மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் குமரிக் கடல் பகுதியில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்