சென்னை விமான நிலையத்தில் சூறாவளி காற்றுடன் கூடிய கனமழை பெய்ததால் சில விமானங்கள் திருப்பி விடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன.
இன்று காலை முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் மழை பெய்து வரும் நிலையில் சென்னை விமான நிலையம் பகுதியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக சென்னையில் தரையிறங்க வேண்டிய ஏழு விமானங்கள் வானில் வட்ட வட்டமிட்டபடி பறந்த நிலையில் சில விமானங்கள் ஓரளவு சீரானதும் தரையிறங்கியதாகவும் சில விமானங்கள் திருப்பி விடப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
டெல்லியில் இருந்து சென்னைக்கு வந்த விமானம் பலத்த காற்று காரணமாக மழை கொட்டியதால் பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டதாகவும், சென்னையில் வானிலை சீரடைந்த பின்னர் பெங்களூரில் இருந்து அந்த விமானம் சென்னை திரும்பி வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் மங்களூரில் இருந்து இன்று காலை சென்னைக்கு வர வேண்டிய விமானம் மோசமான வானிலை காரணமாக தாமதமாக 11:40 மணிக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.