’கிண்டி விபத்து’ - 3 மாணவிகள் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம்!

வெள்ளி, 14 அக்டோபர் 2016 (21:22 IST)
நேற்று மதியம் கிண்டி பாலத்தில் இருந்து சைதாப்பேட்டை நோக்கி சென்ற தண்ணீர் லாரி, இருசக்கர வாகனம் மற்றும் ஒரு ஆட்டோ மீது மோதியது. மேலும், பாதசாரிகள் மீதும் மோதியபடி நிற்காமல் சென்றது.

 
 
இந்த விபத்தில், சாலையை கடக்க முயன்ற கல்லூரி மாணவிகள் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், காயமடைந்த ஒரு பெண் உட்பட 3 பேர் ஆபத்தான நிலையில் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
 
உயிரிழந்த மாணவிகள்  போரூரை சேர்ந்த காயத்ரி, திருவொற்றியூரை சேர்ந்த சித்ரா, புளியந்தோப்பை சேர்ந்த ஆயிஷா என்பது தெரியவந்தது. செல்லம்மாள் மாலை நேரக் கல்லூரியில் படித்து வந்த அவர்கள், கல்லூரிக்கு வரும்போது லாரி மோதி உயிரிழந்துள்ளனர். 
 
இச்சம்பவம் குறித்து கிண்டி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
 
மாணவிகள் உயிரிழந்ததை அடுத்து செல்லம்மாள் கல்லூரிக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. 
 
இந்நிலையில், விபத்தில் உயிரிழந்த 3 மாணவிகளின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என கல்லூரி நிர்வாகம் அறிவித்தது. இதை அடுத்து, செல்லம்மாள் கல்லூரி நிர்வாகம் சார்பில் 3 பேரின் குடும்பத்திற்கும் தலா ரூ.2 லட்சம் வழங்கப்பட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்