குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு பதவியேற்ற பின்னர் முதல் முறையாக 2 நாள் பயணமாக தமிழகம் வருகிறார். டெல்லியில் இருந்து மதுரைக்கு வரும் அவரை தமிழக ஆளுனர் ஆர் என் ரவி வரவேற்கிறார். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் செய்யும் அவர் அங்கிருந்து கோவைக்குப் புறப்படுகிறார்.