பாஜகவில் இருந்து ஒதுங்குகிறாரா கமல் பட நாயகி?

வெள்ளி, 18 செப்டம்பர் 2020 (13:17 IST)
கடந்த சில மாதங்களாக பல திரையுலக பிரபலங்கள் பாஜகவில் இணைந்து வரும் நிலையில் கடந்த சில வருடங்களாக பாஜகவில் இருந்த கௌதமி அக்கட்சியில் இருந்து விலக முடிவு எடுத்துள்ளதாக வெளி வந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
ஜெயலலிதாவின் தீவிர அபிமானியாக இருந்த நடிகை கௌதமி, அவருடைய மறைவுக்குப் பின்னர் பாஜகவில் இணைந்தார். அவருக்கு பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் பதவி வழங்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது 
 
பாஜகவில் இருந்து ஒதுங்குகிறாரா கமல் பட நாயகி?
இந்த நிலையில் பாஜக தமிழக தலைவர் வேல்முருகன் தேர்வு செய்யப்பட்டதில் இருந்து நடிகை கௌதமி ஒதுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக இலக்கிய அணி செயலாளர் பதவிக்கு காயத்ரி ரகுராம், நமீதா போன்றவர்கள் நியமனம் செய்யப்பட்ட நிலையில் கௌதமிக்கு எந்தவித பதவியும் வழங்கப்படாமல் இருந்தது அவருக்கு ஏமாற்றத்தை அளித்தது 
 
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக பாஜக கட்சிக் கூட்டங்கள்,ஆலோசனை கூட்டங்கள் ஆகியவற்றை கலந்து கொள்ளாமல் கௌதமி ஒதுங்கி இருப்பதாகவும் விரைவில் அவர் பாஜகவில் இருந்து விலக இருப்பதாகவும் கூறப்படுகிறது 
 
ஒருவேளை கௌதமி பாஜகவில் இருந்து விலகினால் கமல் கட்சியான மக்கள் நீதி மய்யத்தில் சேர்வாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்