தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்காக ஈட்டு விடுப்புத் தொகை ஓராண்டு நிறுத்தி வைக்கப்படுவதாக நேற்று அறிவிப்பு வெளியிட்டது. கொரோனா காரணமாக அரசு ஊழியர்களுக்காக ஈட்டு ஊதியம் நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் திமுக தலைவருமான ஸ்டாலின் கூறியுள்ளதாவது:
அரசு ஊழியர்களின் மாத சம்பளம் மீது தாக்குதல் தொடுத்து, ஆணை வெளியிட்டிருப்பது மிகவும் வேதனைக்குரியது, கண்டனத்திற்குரியது . அரசின் நடவடிக்கை ஊழியர்களின் ஊக்கத்தையும், உற்சாகத்தையும் இழக்க வைத்து மனதளவில் சோர்வடையச் செய்யும். எனவே அகவிலைப்படி ரத்து, ஈட்டிய விடுப்பு உரிமை ரத்து போன்ற அரசாணைகளை திரும்பப் பெற வேண்டும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும், அரசு ஊழியர்களின் சம்பளத்தை இறுக்கி அவர்களை இன்னலுக்கு ஆளாக்குவது அறம் ஆகாது.மத்திய அரசிடம் இருந்து தேவையான நிதியை உரிமையுடன் கேட்டுப் பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின்