ஈரோடு இடைத்தேர்தல்: வேட்புமனு தாக்கல் செய்ய வந்தவர்களை திருப்பி அனுப்பிய அதிகாரிகள்..!

Webdunia
செவ்வாய், 31 ஜனவரி 2023 (17:39 IST)
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் திமுக உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளரை அறிவித்துவிட்டு பிரச்சாரத்தை ஆரம்பித்து விட்டன. 
 
ஆனால் அதிமுக உள்ளிட்ட ஒரு சில கட்சிகள் இன்னும் வேட்பாளரை அறிவிக்காத நிலையில் இன்று காலை 11 மணிக்கு வேட்புமனு தாக்கல் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இன்று மாலை 3 மணியுடன் வேட்பு மனுதாக்கல் முடிவடைந்த நிலையில் முதல் நாளில் நான்கு சுயேட்சை வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். மேலும் 6 பேர் வேட்புமனு  தாக்கல் செய்ய வந்ததாகவும் ஆனால் அவர்களது வேட்ப மனு ஆவணத்தில் குறைபாடு இருந்ததால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகவும் தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்