# காமராஜர் சாலையில் போர் நினைவிடம் நோக்கி செல்லும் வாகனங்கள் உழைப்பாளர் சிலை அருகே திருப்பி விடப்பட்டு வாலாஜா சாலை, அண்ணா சாலை, பெரியார் சிலை, சென்ட்ரல் ரயில் நிலையம், ஈ.வெ.ரா. சாலை வழியாக செல்லலாம்.
# முத்துசாமி சந்திப்பிலிருந்து அண்ணா சாலை மற்றும் கொடி மர சாலைகளுக்கு வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. அதற்குப் பதிலாக, பல்லவன் சாலை, ஈ.வெரா.சாலை, சென்ட்ரல் ரயில் நிலையம், பெரியமேடு காந்தி இர்வின் சாலை வழியாக செல்லலாம்
# கனரக சரக்கு வாகனங்கள், இலகு ரக சரக்கு வாகனங்கள் தீவுத்திடலை சுற்றியுள்ள பிரதான சாலை, வாலாஜா சாலை,அண்ணா சாலை, காமராஜர் சாலை, ஈ.வெ.ரா. சாலை, ராஜா அண்ணாமலை மன்றம், முத்துசாமி பாயின்ட், பாரிமுனை ஆகிய சாலைகளில் மதியம் 12 முதல் இரவு 10 மணி வரை செல்வதற்கு தற்காலிக தடை அமலில் இருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது..