ஆள் கடத்தல் - நில அபகரிப்பு புகழ் செந்தில் பாலாஜிக்கு சீட் - என்னம்மா இப்படி பண்ணீறீங்களேம்மா.......!

புதன், 13 ஏப்ரல் 2016 (00:08 IST)
ஆள் கடத்தல் - நில அபகரிப்பு புகழ் மற்றும்  "அடுத்த முதல்வர்" புகழ் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு, அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட முதல்வர் ஜெயலலிதா வாய்ப்பு வழங்கியுள்ளார்.
 

 
கடந்த முறை கரூர் தொகுதியில் போட்டியிட்ட செந்தில் பாலாஜி, காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜோதிமணியை சுமார் 44 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி கண்டார். திருச்சி கலியபெருமாள் மற்றும் இளவரதி பரிந்துரையின் பேரில் போக்குவரத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். மேலும், அதிமுக கரூர் மாவட்ட செயலாளராகவும் நியமிக்கப்பட்டார்.
 
இதனையடுத்து கோகுல் என்பவரை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரைச் சார்ந்த நபர்கள் கடத்திவிட்டதாகவும், அவரை பல கோடி சொத்துக்களை அபகரிக்க முயன்றதாகவும் புகார் எழுந்து, நீதி மன்றம் சென்றது. திமுக தலைவர் கருணாநிதியே இது குறித்து அறிக்கை வெளியிட்டார்.
 
இந்த நிலையில், செந்தில் பாலாஜி போக்குவரத்துறை அமைச்சராக இருந்த போது டிரைவர் மற்றும் கண்டக்டர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு அவரும், அவரைச் சார்ந்தவர்களும் லஞ்சம் வாங்கிக் கொண்டு பணியும் கொடுக்கவில்லை, பணத்தையும் திருப்பிக் கொடுக்கவில்லை என நீலாங்கரையைச் சேர்ந்த கோபி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார்.
 
இந்த தகவல்கள் அனைத்தும் உளவுத்துறை மூலம் முதல்வர் ஜெயலலிதா கவனத்திற்கு சென்றதா அல்லது உண்மையான தகவல்கள் மறைக்கப்பட்டு, ஜோடிக்கப்பட்ட தகவல்கள் அவர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதா என தெரியவில்லை.
 
சிறு புகார்களுக்கு ஆளானவர்களை எல்லாம் வேட்பாளர் பட்டியிலில் இருந்து தூக்கி கடாசும் ஜெயலலிதா, செந்தில பாலாஜி மீது இத்தனை புகார்கள் நீதி மன்றம் வரை சென்றும் அவரை மீண்டும் வேட்பாளராக அறிவித்துள்ளார். இதை அதிமுக தொண்டர்கள் மிகவும் ஆச்சர்யமாக பார்க்கின்றனர்.
 
முதல்வர் ஜெயலலிதாவின் இந்த அதிரடி முடிவுக்கு காரணம் தெரியாமல், என்னம்மா இப்படி பண்ணீட்டீங்களே அம்மா... என அதிமுக தொண்டர்கள் கதறி கண்ணீர் வடிக்கின்றனர்.
 
மேலும், இந்த தொகுதியில் இந்திய பணக்கார்களில் ஒருவரான திமுகவைச் சேர்ந்த கே.சி.பழனிசாமி களம் இறங்குவதால், தொகுதி அனலில் தகிக்கிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்