பல ஆண்டுகளாக சென்னையில் பிரபல ஃபோர்டு (Ford) கார் நிறுவனம் கார்களை தயாரித்து வந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்னர் ஆலையை மூடிய நிலையில் மு.க.ஸ்டாலின் ஃபோர்டு நிறுவன அதிகாரிகளை சந்தித்து பேசியுள்ளார்.
உலக நாடுகளில் உள்ள தொழில் நிறுவனங்களை தமிழ்நாட்டில் முதலீடு செய்ய செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், இதற்கான தற்போது அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு நோக்கியா, பேபால், மைக்ரோசிப் செமிகண்டக்டர் அமைக்கும் நிறுவனம் உள்ளிட்ட பல நிறுவனங்களுடன் பல கோடி முதலீடு செய்யும் அளவில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது.
தொடர்ந்து பிரபலமான கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு நிறுவனத்தின் குழுவுடன் சந்திப்பு மேற்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டில் மீண்டும் ஃபோர்டு ஆலையை தொடங்குவது குறித்து அவர்களுடன் பேசியுள்ளார். 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டில் சென்னை மறைமலை நகரில் செயல்பட்டு வந்த ஃபோர்டு கார் உற்பத்தி ஆலை கடந்த 2022ம் ஆண்டில் தனது செயல்பாடுகளை நிறுத்தியது.
இந்நிலையில் ஃபோர்டு நிறுவனத்தை மீண்டும் தமிழ்நாட்டில் உற்பத்தியை தொடங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Edit by Prasanth.K