வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தியும் மீண்டும் சேர்ந்த போராட்டகாரர்கள்!

திங்கள், 23 ஜனவரி 2017 (17:43 IST)
ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வந்ததையடுத்து, சென்னை மெரினா கடற்கரையில், கடந்த ஒரு  வார காலமாக போராட்டம் நடந்தி வந்தர்களை கலைந்து செல்லுமாறு இன்று காலை போலீசார் வலியுறுத்தினார்கள்.



ஆனால்,  சிலர் அதை ஏற்க மறுத்து,  கடலில் அருகில் சென்று மனித சங்கிலி அமைத்து அங்கிருந்து செல்லமாட்டோம் என கூறி வருகின்றனர். ஒரு கட்டத்திற்கு மேல் போலீசார் தடியடியும் நடத்தினார்கள். இதனால் மெரினா கடற்கறை போர்க்களமானது.
 
இதனால் மெரினாவில் இன்று போராட்டக்காரர்களை வலுக்கட்டாயமாக போலீசார் அப்புறப்படுத்தினர். இதனால், அங்கு  பதற்றமான சூழல் நிலவியது. இந்நிலையில் ராகவா லாரன்ஸ் மெரினா வந்துள்ளார். அப்போது, ஜல்லிக்கட்டு தொடர்பாக நாம்  நடத்திய போராட்டம் வெற்றி பெற்றுள்ளது. போராட்டத்தில் வெற்றி அடைந்ததை கொண்டாட வேண்டிய நேரமிது. தயவு செய்து  போராட்டத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் கலைந்து செல்லுங்கள்.' என்று கூறினார். எனவே போராட்டத்தை கை விடுங்கள் என நடிகர்  ராகவா லாரன்ஸ் வேண்டுகோள் விடுத்து
 
இதனை தொடர்ந்து அறவழியில் போராடிய 'மாணவர்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்திய போலீஸ் மன்னிப்பு கேட்க  வேண்டும், போராட்டக்காரர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகள் திரும்பப்பெற வேண்டும், போலீஸால் காயம் பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், சட்டமுன்வடிவு நகல் அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும்.' என்று கூறியுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்