நடிகர் ரஜினிகாத் அரசியலுக்கு வருகிறாரோ இல்லையோ ஆனால் பாஜக அவரை தொடந்து தங்கள் கட்சியில் இணையுமாறு கோரிக்கை வைத்து வருகிறது. இதனை விமர்சித்து நடிகையும் காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளருமான குஷ்பு டுவிட்டரில் கருத்து கூறியுள்ளார்.
குஷ்பு டுவிட்டரில் சுறுசுறுப்பாக செயல்படக்கூடியவர். சில நேரங்களில் ரசிகர்களுடன் உரையாடுவர். அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலும் அளிப்பார். சில தினங்களுக்கு குஷ்புவை அசிங்கமாக டுவிட்டரில் திட்டியவரை அவரது பாணியிலேயே குஷ்புவும் திட்டிவிட்டது பரபரப்பாக பேசப்பட்டது.
Jus read @drtamilisaibjp statement..Mam,ppl shud join a party 4 it's ideology n own sensibilities..u hve bn begging right left n centre 1/2
இந்நிலையில் நேற்று குஷ்பு டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். அதில், தமிழிசை சௌந்தரராஜனின் அறிக்கையைப் படித்தேன். கட்சியின் கொள்கையைப் பார்த்து சொந்த விருப்பத்தின் பெயரில் ஒருவர் கட்சியில் சேரவேண்டும். ஆனால், ரஜினிகாந்த்திடம் நீங்கள் கடந்த மூன்று ஆண்டுகளாகக் கெஞ்சிக்கொண்டிருக்கிறீர்கள். என் சொந்த விருப்பத்தின் பேரில்தான் காங்கிரஸில் இணைந்தேன் என்பதை உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன் என கூறினார்.
இதற்கு பதில் அளித்த பாஜக தமிழக தலைவர் தமிழிசை, காங்கிரஸில் சேர அங்கிருந்து யாரும் உங்களை அழைக்கவில்லை. ஆனால் திமுகவிலிருந்து உங்களை துரத்துபவர்கள் இருந்தார்களே என்றார். மேலும், நீங்கள் காங்கிரஸில் சேர்ந்தீர்களா, தாவினீர்களா? திமுகவிலிருந்து விலகி, காங்கிரஸில் சேர்ந்ததா சிறந்த கொள்கை? ஆனால் எந்த கொள்கையின் அடிப்படையில் சேர்ந்தீர்கள் என்று எல்லாருக்கும் தெரியும் என கூறினார்.
— Tamilisai Soundrajan (@drtamilisaibjp) May 24, 2017
அதன் பின்னர் பதிலளித்த குஷ்பு கொஞ்சம் காட்டமாக, உங்களது மூளையைக் கொஞ்சமாவது பயன்படுத்துங்கள். நான் திமுகவிலிருந்து விலகி ஆறு மாதங்களுக்குப் பின்னர்தான் காங்கிரஸ் கட்சியில் இணைந்தேன். நான் திமுகவிலிருந்து விலகினேன் என்று தெரிந்திருக்க, நீங்கள் என் உதவியாளரும் இல்லை என் மக்கள் தொடர்பாளரும் இல்லை என்றார்.
இரண்டு தேசிய கட்சியின் முக்கிய பொறுப்பில் உள்ள பெண் தலைவர்கள் இப்படி டுவிட்ட்ரில் நேருக்கு நேர் மோதிக்கொண்டது பரபாரப்பாக பேசப்படுகிறது.