சேகர் ரெட்டியோடு தொடர்பு ; எந்நேரமும் கைதாகலாம் : தினகரனிடம் பயந்த எடப்பாடி

Webdunia
திங்கள், 18 செப்டம்பர் 2017 (09:39 IST)
சேகர் ரெட்டியோடு இருந்த தொடர்பின் காரணமாக தான் எந்நேரமும் கைதாகலாம் என எடப்பாடி பழனிச்சாமி தன்னிடம் கூறி பயந்ததாக டிடிவி தினகரன் கூறியுள்ளார்.


 

 
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பிற்கும், தினகரனுக்கும் இடையே மோதல் வலுப்பெற்று வருகிறது. ஒருவர் மீது ஒருவர் காட்டமான விமர்சனங்களை தொடர்ந்து கூறி வருகின்றனர்.
 
சமீபத்தில் ஒரு விழாவில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, விரைவில் தினகரன் மாமியார் வீட்டிற்கு செல்வார் எனக் கூறியிருந்தார். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தினகரன் “ சசிகலாதான் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் பதவியில் அமர வைத்தார். தற்போது அவருக்கு எதிராகவே அவர் பேசி வருகிறார். ஒரு முதல்வர் பதவியில் இருப்பவர் இப்படி மிரட்டும் தொனியில் பேசியது நல்லதல்ல. 


 

 
அவர் முதல்வராக பதவியேற்ற சில நாளில், அவரோடு சேர்த்து நான் மற்றும் சில அமைச்சர்கள் சசிகலாவை சந்திக்க சிறைக்கு செல்ல புறப்பட்டோம். அப்போது என்னிடம் வந்த எடப்பாடி “நீங்கள் செல்லுங்கள். நான் வரவில்லை. எனக்கு பயமாக இருக்கிறது” எனக் கூறினார்.  அதற்கு நான் “என்ன பயம்?” எனக் கேட்டேன். 
 
அதற்கு பதில் கூறிய அவர், சேகர் ரெட்டியோடு என் மகன் மற்றும் என் உறவினர்கள் சிலருக்கு தொடர்பு உண்டு. எனவே, நானும், என் மகனும் எந்நேரமும் கைதாகலாம். எனவே நீங்கள் செல்லுங்கள்” எனக் கூறினார். இதை நான் சசிகலாவிடம் தெரிவித்தேன். 
 
அது கேட்டு அதிர்ச்சியடைந்த சசிகலா, இது முன்பே தெரிந்திருந்தால் வழக்கு இல்லாத ஒருவரை முதலமைச்சர் ஆக்கியிருக்கலாமே என என்னிடம் கூறினர் என தினகரன் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்