முன்னதாக முதல்வர் வேட்பாளர் குறித்து அறிவிப்பு குறித்த ஆலோசனை விடிய விடிய நடைபெற்றதாகவும் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பதில் தனக்கு ஆட்சேபணை இல்லை என்று ஓபிஎஸ் கூறியதாகவும், ஆனால் அதே நேரத்தில் 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழு தொடர்பான அறிவிப்பும் வெளிவர வேண்டும் என்றும் ஓபிஎஸ் நிபந்தனை விதித்ததாகவும் கூறப்படுகிறது