கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஷகில். இவர் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை செய்கிறார். அன்னுர் தென்னம்பாளையம் ரோடு, ஜி.கே.எஸ். பில்டிங் பின்புறம் குடியிருந்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த சோமசுந்தரம் - சாரதா தம்பதியின் மகள் தன்யா.
ஷகில், தன்யா வீட்டருகே குடியிருந்து வருவதால், தன்யாவை ஒருதலையாக விரும்பியுள்ளார். இந்நிலையில் தன்யாவுக்கு வேறொரு இளைஞருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அடுத்த மாதம் திருமணத்திற்கான ஏற்பாடுகளை இருவீட்டாரும் செய்து வந்தனர்.
தன்யாவுக்கு வேறொருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டதால் ஏமாற்றமடைந்த ஷகில், தன்யாவை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். அதன்படி, தன்யா வீட்டுக்குள் நுழைந்து அவரை கத்தியால் குத்திவிட்டு ஷகில் தப்பியுள்ளார். அவரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.