இது குறித்து, பாமக முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில், ஜெயலலிதா தலைமையிலான புதிய அரசு பதவியேற்று ஒரு மாதம் நிறைவடைந்துள்ள நிலையில், சட்டம் - ஒழுங்கு நிலை மனநிறைவளிப்பதாக இல்லை.
ஆனால், கொலை, கொள்ளைகள் அதிகரித்திருப்பதன் அபாயத்தை தமிழக அரசு உணர்ந்ததாகத் தெரியவில்லை. அதிமுக ஆட்சியில் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றங்கள் குறைந்து வருவதாக ஜெயலலிதா கூறியிருக்கிறார்.
அதேபோல், தமிழகத்தில் கூலிப்படைகளின் அட்டகாசம் பெருகிவிட்டது என்பதும் மறுக்க முடியாத உண்மை. எனவே, இந்தியாவின் எதிர்காலத் தூண்களை பாதுகாத்து, கூலிப்படைக் கலாச்சாரத்திற்கு முடிவு கட்ட வேண்டியது நமது முதன்மைக் கடமையாகும் என தெரிவித்துள்ளார்.