பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்; மதிப்பெண் முறையா? கிரேடு முறையா? – அமைச்சர் விளக்கம்!

Webdunia
புதன், 5 ஆகஸ்ட் 2020 (09:18 IST)
தமிழகத்தில் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாக உள்ள நிலையில் முக்கிய அறிவிப்புகளை கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகளால் மார்ச் மாதம் முதலாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நிறுத்தி வைக்கப்பட்டன. மீண்டும் தேர்வு நடத்தும் சூழல் ஏற்படாததால் மாணவர்கள் அனைவருக்கும் தேர்வின்றி தேர்ச்சி வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டார்.

அதை தொடர்ந்து மாணவர்கள் அனைவருக்கும் எதன் அடிப்படையில் தேர்ச்சி அளிப்பது? மதிப்பெண் எவ்வாறு ஒதுக்கீடு செய்வது என்ற கேள்வி எழுந்தது. அதை தொடர்ந்து கிரேடு முறையில் மதிப்பெண் வழங்கப்படலாம் என்றும் பேசிக் கொள்ளப்பட்டது.

இந்நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் புதிய கல்விக் கொள்கை குறித்து பேசியுள்ளார். அதில் உள்ளதுபோல தமிழகத்தில் 5 மற்றும் 8 ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படாது என கூறியுள்ள அவர் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மதிப்பெண் முறையிலேயே வெளியிடப்படும் என்றும், பணிகள் கிட்டத்தட்ட முடிந்து விட்ட நிலையில் விரைவில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்