எடப்பாடி பழனிசாமி திடீர் டெல்லி பயணம்..அமித்ஷாவுடன் அவசர சந்திப்பு?

Webdunia
புதன், 13 செப்டம்பர் 2023 (10:31 IST)
முன்னாள் முதல்வரும் தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி திடீரென நாளை டெல்லி செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.  
 
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நாளை டெல்லி செல்ல இருப்பதாகவும் டெல்லியில் அவர் உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாஜக தேசிய தலைவர் நட்டா உள்ளிட்டோரை சந்திக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.  
 
இன்னும் ஒருசில நாட்களில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற உள்ள நிலையில் அது குறித்த முக்கிய பேச்சுவார்த்தை நடத்தப்படலாம் என்றும் அதேபோல் வரும் பாராளுமன்ற தேர்தலில் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடத்தப்படலாம் என்று கூறப்படுகிறது. 
 
இருப்பினும் இந்த சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது. டெல்லியில் அமித்ஷா மற்றும் நட்டா ஆகியோர்களை  சந்தித்த பின்னர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்திக்க இருப்பதாகவும் அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்