சாத்தான்குளம் சம்பவம்: சிக்கலில் முதல்வர் எடப்பாடியார்!

Webdunia
புதன், 15 ஜூலை 2020 (17:29 IST)
சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக  முதல்வரை விசாரிக்க வேண்டும் என தொடரப்பட்ட வழக்கு நாளைக்கு விசாரணைக்கு வருகிறது. 
 
சாத்தான்குளம் தந்தை மகன் காவல் நிலையத்தில் படுகொலை செய்யப்பட்ட வழக்கு தமிழகம் முழுவதும் மட்டுமின்றி இந்தியாவையே பரபரப்புக்கு உள்ளாக்கியது. இந்த வழக்கை தானாக எடுத்து முன் வந்த மதுரை ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து முதலில் 5 காவல்துறையினர்களையும் பின்னர் அடுத்ததாக 5 காவல்துறையினர்களையும் கைது செய்தனர். 
 
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த வழக்கு சிபிஐ இடம் கைமாறியது என்பதும் அவர்கள் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரணை செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் நீதிமன்றத்தில் கைது செய்யப்பட்ட அனைவரையும் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ, நீதிமன்றத்தில் அனுமதி பெற்று உள்ளது. இதனை அடுத்து தற்போது சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் சிபிஐ தீவிரமாக விசாரணை செய்து வருகிறது.
 
இதனைத்தொடர்ந்து சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக  முதல்வரை விசாரிக்க வேண்டும் என தொடரப்பட்ட வழக்கு நாளைக்கு விசாரணைக்கு வருகிறது. தந்தை - மகன் இருவரும் உடல் நலக்குறைவால் மரணித்தனர் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்ததால் அவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது என தெரிகிறது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்