அதற்கு பதில் கூறிய அவை முன்னவர் துரைமுருகன் பல ஆண்டுகளாக அவர்களிடம் பேசியும் நீர் கிடைக்காததால் தான் நீதிமன்றம் சென்றோம் என்று தெரிவித்தார். அப்படி என்றால் அப்படிப்பட்ட கட்சியுடன் ஏன் கூட்டணி வைத்தீர்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கேட்கும்போது பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்கு தான் இந்தியா கூட்டணி, கொள்கை அடிப்படையில் அல்ல என துரைமுருகன் பதிலளித்தார்.