இந்நிலையில் பல பகுதிகளிலும் நீரை வெளியேற்றும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதுடன், மக்களுக்கு தேவையான உணவு, மருத்துவம் போன்றவையும் அளிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இன்று மயிலாப்பூரில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆய்வுகள் மேற்கொண்டார்.
பின்னர் பேசிய அவர் “சென்னையில் மழை வெள்ள மீட்பு பணிகள் தொய்வடைந்துள்ளன. முதல்வரின் கொளத்தூர் தொகுதியிலேயே மழைநீர் வெளியேற்றப்படாமல் உள்ளது. சென்னையில் 4 இடங்களில் மட்டுமே மழை நீரை வெளியேற்றும் பணி நடக்கிறது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ரூ.2 ஆயிரம் தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.