போன மாதம் 65 ரூபாய், இந்த மாதம் 91,000 ரூபாய்: மின் கட்டணத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த நபர்!
செவ்வாய், 1 நவம்பர் 2022 (18:00 IST)
ஒவ்வொரு மாதமும் 60 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை மட்டுமே மின் கட்டணம் செலுத்தி வந்த வீட்டு உரிமையாளர் ஒருவர் இந்த மாதம் 91 ஆயிரம் ரூபாய் மின் கட்டணம் வந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்
நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள வீட்டு உரிமையாளர் ஒருவர் கடந்த மாதம் 65 ரூபாய் மட்டுமே மின்கட்டணம் செலுத்தி உள்ளார். இந்த நிலையில் இந்த மாதம் அவர் 91 ஆயிரத்து 130 ரூபாய் செலுத்த வேண்டும் என செல்போனுக்கு குறுஞ்செய்தி வந்தது
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் மின்வாரிய அலுவலகம் சென்று விளக்கம் கேட்டபோது தொழில்நுட்ப கோளாறு காரணமாக தவறு நடந்திருக்கலாம் என்றும் இரண்டு நாட்களில் சரியான மின் கட்டணம் குறித்த குறுஞ்செய்தி அனுப்புவோம் என்றும் மின்வாரிய ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்
இதனை அடுத்து இரண்டு நாட்கள் கழித்து அவருக்கு 122 ரூபாய் என மின்கட்டணம் குறுஞ்செய்தியாக வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது