புது கொரோனா வைரஸ் முன்பு இருந்த வைரஸ் வகையை விடவும் 70% வேகமாக பரவக்கூடியது என நம்பப்படுகிறது. 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதமே இந்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. டிசம்பர் மாதத்தில் 60% தொற்று, இந்த வகை வைரஸால் ஏற்பட்டிருக்க கூடும் என அஞ்சப்படுகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் ஒருவருக்கும் இந்தியா முழுவது 6 பேருக்கும் உருமாறிய கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், உருமாறிய கொரோனா குறித்து மக்கள் அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை; முன்னெச்சரிக்கையோடு இருப்பதே அவசியம். முந்தைய கொரோனா வைரஸுக்கும் உருமாறிய வைரஸுக்கும் பெரிய அளவில் வேறுபாடு இல்லை என டி.வி.வெங்கடேஸ்வரன் தெரிவித்துள்ளார்.