இந்தநிலையில் அவர் வீட்டில் வளர்த்த நாய்களில் ஒன்று குட்டி போட்டது. திடீரென ஒருநாள் பூனைக்குட்டி நாயிடம் பால் குடிக்கச் சென்றது. அதனைக் கண்ட நாய் பூனையை பால் குடிக்க அனுமதித்தது. கடந்த 5 மாதங்களாக அந்த பூனைக்கு நாய் பால் கொடுத்து வருகிறது. நாளடைவில் அந்த பூனையை அதிக கவனத்துடன் பார்த்துவருகிறதாம் அந்த பாலூட்டும் நாய். இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் நேரில் வந்து நாய் மற்றும் பூனையை பார்த்துசெல்கின்றனர்.