இவர், புதுமுகம் சுந்தர் இயக்கும் கர்ஜனை என்ற படத்தில் த்ரிஷாவின் கணவராக நடிக்கிறார். கர்ஜனை பாலிவுட் படமான என்.எச். 10 படத்தின் ரீமேக் ஆகும். இந்தியில் அனுஷ்கா சர்மா நடித்த கதாபாத்திரத்தில் த்ரிஷா நடிக்கிறார். அவரின் கணவராக அமித் நடிக்கிறார்.
இது குறித்து, அமித் பார்கவ் கூறியதாவது, “கல்யாணம் முதல் காதல் வரையில் என் நடிப்பை பார்த்ததால் என்னை ஆடிஷன் இல்லாமலேயே தேர்வு செய்துவிட்டனர். த்ரிஷாவுடன் சேர்ந்து நடிப்பதில் மகிழ்ச்சியாக உள்ளது. இது உண்மை தானா என்பதே எனக்கு இன்னும் புரியவில்லை. படத்தில் நடித்து முடித்து திரையில் பார்க்கும் வரை நம்ப முடியாது.” என்றார்.