இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, முதலமைச்சர் அலுவலகம் செல்லக்கூடாது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை உச்சநீதிமன்றம் விதித்துள்ளது.
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால், தேர்தல் சமயம் என்பதால் தனக்கு இடைக்கால ஜாமீன் வழங்க கோரி உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டார்.
இந்த வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜூன் ஒன்றாம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. மேலும் கெஜ்ரிவாலுக்கு பல்வேறு நிபந்தனைகளை நீதிமன்றம் விதித்துள்ளது.
இடைக்கால ஜாமீன் பெற்ற அரவிந்த் கெஜ்ரிவால் முதலமைச்சர் அலுவலகம் மற்றும் தலைமைச் செயலகம் செல்லக்கூடாது என்று உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. மேலும் அலுவல் சார்ந்த கோப்புகளில் அரவிந்த் கெஜ்ரிவால் கையெழுத்து போடக்கூடாது என்றும் ஜாமீன் தொகையாக 50 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.