திமுக கூட்டணியில் இருந்து விலகுகிறதா விடுதலைச்சிறுத்தைகள்?

ஞாயிறு, 3 மார்ச் 2019 (09:24 IST)
வரும் பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட அதிமுக, திமுக என இரு கட்சிகளும் சிறிய கட்சிகளை வளைத்து போடும் தீவிர முயற்சியில் உள்ளது இந்த நிலையில் அதிமுக கூட்டணியில் இதுவரை பாமக, பாஜக, மற்றும் புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. அதேபோல் திமுக கூட்டணியில் காங்கிரஸ் மற்றும் ஐஜேகே கட்சிகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.
 
மதிமுக, விசிக, தமாக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்பட ஒருசில கட்சிகளிடம் திமுக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அதிமுக, தேமுதிகவிடம் மட்டும் பேசி வருகிறது
 
இந்த நிலையில் திமுக கூட்டணியில் கூட்டணிக்கு காத்திருக்கும் அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் விசிக உள்பட ஒருசில கட்சிகளுக்கு ஒரு தொகுதி மட்டுமே தர முடிவு செய்திருப்பதாக கட்சியின் வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த தகவல் விசிக தலைவர் திருமாவளவனுக்கு கடும் அதிர்ச்சியை அளித்துள்ளது. 
 
இந்த நிலையில் திமுகவிடம் பேச்சுவார்த்தை நடத்தி குறைந்தது இரண்டு தொகுதிகள் பெற விசிக முயற்சி செய்யும் என்றும் இல்லாவிட்டால் அடுத்த ஆப்சனை அக்கட்சி சிந்திக்கும் என்றும் கூறப்படுகிறது இந்த நிலையில் திமுக 2 தொகுதிகள் தர ஒப்புக்கொள்ளாவிட்டால் காங்கிரஸ் தனக்காக ஒதுக்கப்பட்ட ஒரு தொகுதியை விட்டுக்கொடுத்தாவது விசிகவை கூட்டணியில் தக்க வைத்துக்கொள்ளும் என்று கூறப்படுகிறது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்