தமிழ்நாட்டை பாஜக மதிப்பில்லை-எம்பி., கனிமொழி

sinoj

வியாழன், 4 ஏப்ரல் 2024 (14:35 IST)
தமிழ்நாட்டை பாஜக மதிப்பில்லை என்று திமுக எம்பி., கனிமொழி விமர்சித்துள்ளார்.
 
மக்களவை தேர்தல் தேதி சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழத்தில் ஒரேகட்டமாக தேர்தல் நடக்கவுள்ளது.
 
இதற்காக பாஜக, காங்கிரஸ், திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.
 
இந்த நிலையில், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி, கனிமொழி எம்பி ஆகியோர் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
 
இந்த நிலையில், இன்று மதுரையில் பிரசாரம் மேற்கொண்டு வரும் கனிமொழி எம்பி., பாஜகவை விமர்சித்துள்ளார்.
 
இதுகுறித்து அவர் கூறியதாவது;
 
மதுரைக்கு சர்வதேச விமான நிலையம் கேட்டால் தரமுடியாது என்கிறார்கள். ஆனால் அயோத்தியில் சர்வதேச விமான நிலையம் அமைக்கிறார்கள்.
 
ரூ.65000 கோடிக்கு மேல் கார்ப்பரேட் நிறுவன கடனை ரத்து செய்துள்ளார்கள். ஆனால், விவசாயிகள் கடனை ரத்து செய்யச் சொன்னால் கேட்க மாட்டார்கள். இளைஞர்களுக்கு  வேலைவாய்ப்பு கேட்டால் பக்கோடா போடச் சொல்கிறார்கள்...யார் கேள்வி கேட்டாலும் அவர்களை நக்சல் என்கிறார்கள். மீறி கேள்வி கேட்கும்போது அமலாக்கத்துரை ரெய்டு செய்கிறது என்று கூறினார்.
 
மேலும்,  பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இதுதான் இந்தியாவின் கடைசித் தேர்தலாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்