இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில் மத்திய அரசு சமீபத்தில் நீட் தேர்வு செப்டம்பர் 13 ஆம் தேதியும், ஜே.இ.இ தேர்வுகள் செப்டம்பர் 1-6 ஆம் தேதி வரையில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, இந்தியாவின் எல்லா பகுதியிலிருந்தும் எனக்கு கிடைத்த உறுதியான தகவலின்படி, நீட், ஜே.இ.இ உள்ளிட்ட தேர்வுகளை எழுதுவதற்கு தேவையான வசதிகள் தற்போது மாணவர்களுக்கு இல்லை.
இவரைத்தொடர்ந்து தற்போது திமுக தலைவர் ஸ்டாலின், மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், 2020-ம் ஆண்டுக்கான நீட் மற்றும் ஜெ.இ.இ தேர்வுகளை எழுதும் மாணவர்கள் சந்திக்கும் இடர்களை, உடனடியாக தங்களது கவனத்திற்குக் கொண்டுவர இக்கடிதத்தை எழுதுகிறேன் என குறிப்பிட்டு மாணவர்களின் உயிரைப் பணயம் வைத்து எந்தவொரு முடிவும் அவசரகதியில் எடுக்கப்படக் கூடாது.
மாணவர்களின் உடல்நலனையும், எதிர்காலத்தையும் அரசு கவனத்தில் கொண்டு செயலாற்ற வேண்டும். எனவே, கொரோனா தொற்றைக் கட்டுக்குள் கொண்டு வரும்வரை ஜெ.இ.இ. மற்றும் நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.