கமல்ஹாசனை திமுக இயக்குகிறதா? கனிமொழி விளக்கம்

சனி, 22 ஜூலை 2017 (05:15 IST)
உலக நாயகன் கமல்ஹாசன் அதிமுக அரசின் ஊழலை தைரியமாக பேசியும் பேட்டியளித்தும் வருகிறார். ஆனால் அதே நேரத்தில் அதிமுக அரசின் ஊழலுக்கு எந்த விதத்திலும் சளைக்காத இன்னொரு ஊழல் கட்சி திமுக என்றும், திமுகவின் ஊழல் குறித்து கமல் எதுவும் பேசவில்லை என்றும் அதுமட்டுமின்றி ஸ்டாலினுக்கு கமல் நன்றி சொல்வது அவரது நடுநிலைக்கு சரியா என்றும் அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.



 
 
இந்த நிலையில் கமல்ஹாசனை உசுப்பிவிட்டதும் இயக்குவதும் திமுகதான் என்றும் ஒருசிலர் விமர்சனம் செய்து வருகின்றனர். இதுகுறித்து திமுகவின் ராஜ்யசபா எம்பி கனிமொழி விளக்கம் கூறியதாவது:
 
தி.மு.க. மாபெரும் இயக்கம். இந்த இயக்கத்துக்கு தலைவர்கள் இருக்கிறார்கள், செயல் தலைவர் இருக்கிறார். எங்களுக்கு வேறு யாரும் தேவை இல்லை. நடிகர் கமல்ஹாசன் மற்றவர்கள் இயக்கி இயங்கக் கூடியவர் இல்லை. யாரையும் இயக்க வேண்டிய அவசியம் தி.மு.க.வுக்கு இல்லை. இத்தனை ஆண்டுகாலமாக தி.மு.க. யாருடைய உதவியும் இல்லாமல் தான் செயல்பட்டு வருகிறது. கமல்ஹாசனுக்கு தி.மு.க. உதவி செய்ய வேண்டிய அவசியமும் இல்லை.
 
இவ்வாறு அவர் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்