திமுகவுக்கு கல்தா! பாஜக முருகன் - துரைசாமி சந்திப்பு பின்னணி என்ன??

செவ்வாய், 19 மே 2020 (15:01 IST)
திமுகவை சேர்ந்த வி.பி.துரைசாமி, பாஜக மாநில தலைவர் எல்.முருகனை சந்தித்து பேசியது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்த வி.பி.துரைசாமி திமுகவில் துணைப் பொதுச்செயலாளராக உள்ளார். இவர் நேற்று பாஜக எல்.முருகனை சந்தித்து பேசினார். இது குறித்த புகைப்படங்களுடம் சமூக வலைத்தளங்களில் வைரலானது. 
 
திமுகவில் ராஜ்யசபா சீட் கிடைக்காத அதிருப்தியில் உள்ள வி.பி.துரைசாமி ஏன் பாஜக தலைவர் முருகனை சந்தித்தார்? பாஜகவில் இணைவதற்கான திட்டமிடல் ஏதேனும் உள்ளதா என கேள்விகள் எழுந்துள்ளது. அதோடு துரைசாமி செல்போன் ஸ்விட்ச் ஆஃப்ல் இருப்பது இன்னும் சந்தேகத்தை கிளப்பியுள்ளது. 
 
ஆனால், தமிழக பாஜக தலைவராக எல்.முருகன் பதவியேற்றதற்காக அவரை சந்தித்து வி.பி.துரைசாமி வாழ்த்து கூறியதாக ஒரு தரப்பு தகவல் தெரிவிக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்