4 முறை திமுக வென்ற கள்ளக்குறிச்சி தொகுதி.. தற்போதைய நிலவரம் என்ன?

Siva

வியாழன், 4 ஏப்ரல் 2024 (18:43 IST)
கள்ளக்குறிச்சி பாராளுமன்ற தொகுதியில் நான்கு முறை திமுகவும் ஒருமுறை அதிமுகவும் வென்றிருக்கும் நிலையில் 2024 ஆம் ஆண்டின் நான்கு முனை போட்டியில் என்ன நடக்கும் என்பதை பார்ப்போம்.

தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் ஒன்று கள்ளக்குறிச்சி என்பதும் இந்த தொகுதியில் கடந்த 2019, 2009 1971, மற்றும் 1967 ஆகிய ஆண்டுகளில் திமுக வெற்றி பெற்றுள்ளது, 2014 ஆம் ஆண்டு தேர்தலில் மட்டும் அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றார்

இந்த நிலையில் கள்ளக்குறிச்சி தொகுதியில் கடந்த முறை போட்டியிட்ட அமைச்சர் பொன்முடியின் மகன் கௌதம் சிகாமணிக்கு வாய்ப்பு கொடுக்காமல் மலையரசன் என்பவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் அதிமுக சார்பில் குமரகுரு, பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் தேவதாஸ் உடையார், நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஜெகதீஷ் பாண்டியன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்

தனது மகனுக்கு மீண்டும் சீட்டு வழங்காததால் அமைச்சர் பொன்முடி அதிருப்தியில் இருப்பதால் இந்த தொகுதியில் அவர் தீவிரமாக இறங்கி வேலை செய்வாரா என்பது கேள்விக்குறியாக உள்ளது. அதே நேரத்தில் திமுக வேட்பாளர் மலையரசன் தீவிரமாக பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார் என்பதும் கூட்டணி பலமும் அவருக்கு இருப்பதால் அது அவருக்கு பாசிட்டிவாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

மேலும் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் களம் இறங்கி உள்ள தேவதாஸ் உடையார் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார். அதிமுகவின் குமரகுருவுக்கும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் மூவரில் யார் வேண்டுமானாலும் வெற்றி பெறலாம் என்ற நிலைதான் கள்ளக்குறிச்சியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்