2.9 லட்சம் பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு!

திங்கள், 2 நவம்பர் 2020 (18:05 IST)
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி நேரத்தில் பொதுத்துறை ஊழியர்களுக்கு போனஸ் வழங்கும் வழக்கம் தமிழக அரசுக்கு உண்டு என்பது தெரிந்ததே. அந்த வகையில் தற்போது பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு வெளி வந்துள்ளது 
 
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் 2.50 லட்சம் பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளியை ஒட்டி 8.33 சதவீதம் போனஸ் மற்றும் 1.67 சதவீதம் கருணைத்தொகை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது 
 
இந்த அறிவிப்பு பொதுத்துறை ஊழியர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு 10 சதவீதம் போனஸ் வழங்கப்படும் என்றும் இதனால் நிரந்தர தொழிலாளர்கள் போனஸ் மற்றும் கருணைத் தொகை ரூபாய் 8400 பெறுவார் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் அரசு போக்குவரத்துக் கழகங்கள், மின்உற்பத்தி, நுகர்பொருள் வாணிபக் கழகம், தேயிலை தோட்டக் கழக ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
 
தமிழக அரசின் இந்த அறிவிப்பு காரணமாக 2 லட்சத்து 96 ஆயிரத்து 975 பேர் தீபாவளி போனஸ் மூலம் பயனடைவார்கள் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்