தினகரனின் தனிக்கட்சி தற்காலிக அடையாளம் மட்டுமே... திவாகரன்!

செவ்வாய், 13 மார்ச் 2018 (19:59 IST)
சுயேச்சை வேட்பாளராக களமிறங்கி ஆர்.கே.நகர் தேர்தலில் வெற்றி பெற்ற தினகரன் தனிக்கட்சி துவங்கும் எண்ணம் இல்லை என கூறினாலும் அதற்கான பணிகளில் அவர் ஈடுபட்டு வருவதாகவே தெரிகிறது.  
 
ஆர்.நகர் இடைதேர்தலின் வெற்றிக்கு பிறகு அதிமுகவை தன் கைக்குள் கொண்டு வந்துவிடலாம் என எண்ணிய தினகரனுக்கு ஓபிஎஸ், ஈபிஎஸ் முட்டுகட்டையாய் நின்றனர். தினகரன் ஆதரவாளர்கள் கட்சியை விட்டு நீக்கப்பட்டனர்.  
 
இருப்பினும், டிடிவி தினகரன், 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தங்களுக்கு சாதகமாகவே தீர்ப்பு வரும், 6 மாதத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சி கலையும் என்று சொல்லி வருகிறார்.  
 
இதற்கிடையே குக்கர் சின்னத்தை நிரந்தரமாக ஒதுக்க கோரி தினகரன் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். நீதிமன்றம் டிடிவி தினகரனுக்கே குக்கர் சின்னத்தை ஒதுக்கி உள்ளது.  

மேலும், தனிக்கட்சி துவங்குவதற்கு தீவிர முயற்சிகளும் செயல்படுத்தப்பட்டு வருகிறதாம். இது குறித்து திவாகரன் கூறியதாவது, அதிமுகவை மீட்கவே தற்காலிகமாக புதிய கட்சி தொடங்கப்படுகிறது. 
 
தேர்தலை சந்திப்பதற்கு ஒரு அடையாளம் தேவை என்பதால் வருகிற 15 ஆம் தேதி தினகரன் கட்சி இந்த தற்காலிக கட்சியை  துவடங்க இருக்கிறார். அதிமுகவின் கட்சி மற்றும் சின்னத்தை மீட்கும் வரை இந்த தற்காலிக அடையாளம் இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்