இந்த நிலையில் ரஜினியை மோசமாக விமர்சனம் செய்யும் நபர்களுக்கு நாகரீகமான முறையில் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று இயக்குனர் ராணா தெரிவித்துள்ளார். இவர் ஹிப்ஹாப் தமிழா நடித்த \நான் சிரித்தால்\ என்ற படத்தின் மூலம் இயக்குனரானவர் என்பதும் தற்போது அடுத்த படத்திற்கான பணிகளை செய்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது
இவர் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளதாவது: ஒரு நல்ல மனிதன், நல்ல நோக்கத்துடன் வரும்போது, அவர் மீது வன்மம் உமிழ்ந்து கொண்டும், அவரின் மதிப்பை, எண்ணத்தை குறைத்து பேசிக்கொண்டும் இருப்பவர்களை கண்டு ஒதுங்கி இருக்க முடியாது. நாகரீகமான முறையில் தக்க பதிலடிகள்கள் பாரபட்சம் பார்க்காமல் கொடுக்கப்படும்! இனி போர் நேரம்