சீரடிக்கு தனியார் ரயில் இயக்கப்படுவது வரவேற்கத்தக்கது: இயக்குனர் சேரன்

புதன், 15 ஜூன் 2022 (15:37 IST)
கோவையிலிருந்து சீரடிக்கு தனியார் சிறப்பு ரயில் இயக்கப்பட்டு இருக்கும் நிலையில் இந்த ரயில் வரவேற்கத்தக்கது என பிரபல இயக்குனர் சேரன் தெரிவித்துள்ளார். 
 
இந்தியாவின் முதல் தனியார் சிறப்பு ரயிலாக கோவையில் இருந்து சீரடி நேற்று கிளம்பியது. தென்னக ரயில்வே ஏற்பாடு செய்திருந்த இந்த ரயிலை,ரயில்வே உயரதிகாரிகள் கொடியசைத்து தொடங்கி வைத்தனர் 
 
நேற்று கிளம்பிய முதல் ரயிலில் 1100 பக்தர்கள் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தனியாருக்கு ரயிலை இயக்க அனுமதி தெருவுக்கு ஒரு பக்கம் அரசியல்வாதிகள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் சீரடிக்கு தனியாக இயக்கப்படுவது வரவேற்கத்தக்கது என இயக்குனர் சேரன் தெரிவித்துள்ளார்
 
சீரடி செல்ல நினைப்பவர்கள் இந்த ரயிலை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அவர் கூறியுள்ளார்
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்